நம்ம ஊரு சமையல் : குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கு தோசை

 Tuesday, December 4, 2018  07:30 PM

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு விருப்பமான உருளைக்கிழங்கை வைத்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2
மைதா - 2 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கொத்துமல்லி இலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவைக்கேற்றவாறு

செய்முறை :


Vanavil New1
உருளைக்கிழங்கைக் கழுவி, தோலை சீவி விட்டு, துருவிக்கொள்ளவும்.

ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

துருவிய உருளைக்கிழங்கை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் மைதா, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீரைச் சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அதில் பச்சை மிளகாய், கொத்துமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை ஊற்றி வட்டமாக பரப்பி விடவும். தோசையைச் சுற்றி ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வேக விடவும். ஒரு பக்கம் சிவக்க வெந்ததும், திருப்பிப் போட்டு மறுபக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விட்டு எடுக்கவும்.

சூப்பரான உருளைக்கிழங்கு தோசை ரெடி.

தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து பரிமாறவும்.

கவனிக்க: இது சாதாரண தோசையை விட வேக நேரமாகும். ஒரு தோசை முருகலாக வேக 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும். மைதா மாவிற்கு பதிலாக கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்.


Vanavil NEw2Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

SNS_Sq2
Website Square Vanavil2
SNS_Sq1