வால்பாறை காட்சிமுனைப் பகுதி மூடல்: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

 Tuesday, December 4, 2018  06:30 PM

வால்பாறை 9ஆவது கொண்டை ஊசி வளைவில் உள்ள காட்சிமுனைப் பகுதியின் சுற்றுச்சுவர் சேதமடைந்திருப்பதால் அங்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


Cusomt2
வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகளிடம், ஆழியாறில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடியில் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளுக்குச் செல்ல இக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆழியாறில் இருந்து அட்டகட்டி வரையிலும், மொத்தம் 16 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.

இதில் 9ஆவது கொண்டை ஊசி வளைவில் காட்சிமுனைப் பகுதி உள்ளது. இந்த காட்சிமுனைப் பகுதியில் இருந்து பார்த்தால் ஆழியாறு அணை, அதனைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளையும் இயற்கை அழகுடன் ரசிக்கலாம். இதனால் வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் காட்சிமுனைப் பகுதியில் நின்று, பார்த்து செல்வது வழக்கம்.
இந்நிலையில் காட்சிமுனைப் பகுதியில் உள்ள தடுப்புச் சுவர் சேதமடைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, அப்பகுதி மூடப்பட்டுள்ளது. அப் பகுதியில் வாகனங்கள் நிறுத்தாமல் இருக்க வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த காட்சிமுனைப் பகுதியை வனத் துறையினர் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்துள்ளனர்.


Custom3

Custom1


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp2
Website Square Vanavil2
Website Square Ad spp3
Website Square Ad spp1
Website Square Vanavil 1