கோவை ஆனைகட்டி மலை வாழ்மக்களுக்கு இலவச கல்வி; மகத்தான சேவை சேயும் தபால் துறை தம்பதிகள்

 Tuesday, December 4, 2018  04:30 PM

யாம் பெற்ற கல்வியை ஏதேனும் ஒரு வழியில், ஏழை குழந்தைகளுக்கு பயன்பெறச் செய்வதை காட்டிலும், வேறென்ன புண்ணியம் இருந்துவிட போகிறது என்றார் பாரதியார். இதை ஒரு சேவையாக, கோவையில் ஒரு தம்பதியர் செய்து கொண்டிருக்கின்றனர்.

தபால்துறையில், 40 ஆண்டு காலம் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற சுதாகர், 70, லட்சுமி,62 தம்பதி, ஆனைக்கட்டி அருகே உள்ள வடக்கலுார் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி சேவை புரிந்து வருகின்றனர்.

இனி, அவர்களோடு...

சாய்பாபா காலனி, கே.கே.புதுார், ஆர்.எஸ்.புரம் என, கோவையில் உள்ள பல தபால் கிளைகளில் பணிபுரிந்துள்ளோம். ஒரே ஒரு பையன்; அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். விடுமுறை சமயங்களில் ஆனைகட்டி, வடக்கலுார் கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு அடிக்கடி செல்வோம். அப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் குழந்தைகளுக்கு ஏதேனும் ஒரு வழியில் உதவி செய்யலாம் என தோன்றியது.


Cusomt2
இக்குழந்தைகள் வடக்கலுார் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர். இருப்பினும், அவர்களுக்காக எங்களது தோட்டத்துக்குள் வகுப்பறை கட்டினோம். சனி, ஞாயிறுகளில் பாடம் சொல்லித்தர திட்டமிட்டோம். குழந்தைகளுக்கு தேவையான பாடப்புத்தங்கள், இதர உதவித்தொகை போக, இவர்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஸ்போக்கன் இங்கிலீஷ் மற்றும் கணக்கு பாடங்களை, 12 ஆண்டுகளாக கற்றுக்கொடுக்கிறோம்.

ஆரம்பத்தில் தயங்கிய குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக ஆர்வத்துடன் வரத்துவங்கினர். இப்போது, 30க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்கிறோம். சனி, ஞாயிறுகளில் காலை, 11:00 முதல், 4:00 மணி வரை வகுப்பு நடத்துவோம். எங்களிடம் படித்த குழந்தைகள் பலர், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். நகரத்தில் படிக்கும் மாணவர்கள் பள்ளி படிப்பு போக, 'ஸ்பெஷல் டியூசன்' செல்கின்றனர். மலைவாழ் பழங்குடியினருக்கு அதுபோன்ற வசதி கிடையாது. அவர்களது கல்வித்தரத்தை மேம்படுத்த கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதுகிறோம்.

கல்வி என்பது அனைவருக்குமான உரிமை. இதை மலைவாழ் மக்களும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகவே, அக்குழந்தைகளின் கல்விச்செலவை நாங்களே ஏற்றுள்ளோம். படிக்க வைக்க இயலாத அக்கிராம மக்கள், ஆர்வத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒழுக்கம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல் பற்றிய நல்ல பழக்க வழக்கங்கள், இயற்கை சார்ந்த வாழ்வியலையும் சொல்லித்தருகிறோம். அக்குழந்தைகளிடம் நல்ல முன்னேற்றம் காண முடிகிறது. அவர்கள் ஆங்கிலத்தில் பேசும்போது, எங்களது மனம் பூரிப்படையும். அக்குழந்தைகளின் எதிர்காலத்துக்கு எங்களால் முடிந்த பங்கை செய்து வருகிறோம். இச்சேவை என்றும் தொடரும் என்கின்றனர், பெருமிதத்தோடு!

பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், நான்கு சுவற்றுக்குள் முடங்கி விடாமல், 70 வயதிலும், தனது வாழ்க்கை துணையுடன் இணைந்து, மலைவாழ் மக்களது குழந்தைகளின் எதிர்காலத்தை சிந்திக்கும் மனம் என்றென்றும் போற்றுதலுக்குரியது!


Custom1

Custom3


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Ad spp1
Website Square Ad spp2
Website Square Vanavil 1