நீலகிரியின் இதயத்துக்குள் ஒரு பயணம்

 Tuesday, December 4, 2018  04:29 PM

நீலகிரி வரும் எந்த ஒரு பயணியும், எல்லாப் பயணிகளும், கண்டிப்பாகத் தவற விடக் கூடாத ஒரு அனுபவம் குன்னூர் மற்றும் ஊட்டி வரை செல்லும் மலை ரயில் பயணம்.

யுனெஸ்கோவின் புள்ளிவிவரப்படி டார்ஜீலிங் மலை ரயில் பாதைக்கு இணையான உலகப் பாரம்பரியம் மிக்க பாதையாக இது கருதப் படுகிறது. உலகிலேயே மிகச் சில இடங்களில் மட்டுமே உள்ள மரத்தாலான அடுக்கு பற்சக்கர அமைப்பு இங்கு உள்ளது.

ஆங்கிலேயர்களால் அமைக்கப் பட்ட இந்தப்பாதையில் 1908 முதல் ரயில் சேவை தொடங்கப்பட்டது. மதராஸ் ரயில்வே அதிகாரத்திற்குட்பட்டது என்றாலும் இந்திய ரயில்வேயின் சேலம் பிரிவு மூலமாகவே இயக்கப் படுகிறது.

இன்னமும் இது நீராவி எஞ்சின் மூலமாகவே இயங்குகிறது. பணம் மற்றும் நேரத்தை சேமிக்கும் பொருட்டு டீசல் என்ஜினாக மாற்றும் திட்டங்களும் தீட்டப்பட்டு வருகின்றன.
நீலகிரி மலை ரயில் பாதையில் பயணம் செல்லாமல் குன்னூருக்குச் சென்ற பயணம் நிறைவுற்றதாக கருதப்படாது. மேட்டுப்பாளையத்தில் தொடங்கி மலைப்பாதை வழியாக குன்னூர் சென்று , பின்னர் ஊட்டிக்கு செல்கிறது . செல்லும் வழியில் இயற்கை அழகும் , மலைப்பூட்டும் காட்சிகளும் பயணிகளைக் கட்டிப்போடும் திறன் வாய்ந்தவை.

தேயிலை மற்றும் சாக்லேட்டின் சுவை

Custom1

குன்னூரின் பொருளாதாரம் பெரும்பாலும் தேயிலை வர்த்தகத்தை சார்ந்து இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தேயிலை பயிரிடுவது தயாரிப்பது மற்றும் விற்பனை செய்வது ஆகியவற்றையே தங்களது வாழ்வாதாரமாக கொண்டிருக்கின்றனர்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட் நீலகிரியின் சிறப்பு . குன்னூரும் இதற்கு விதி விலக்கல்ல. குன்னூரின் எந்தத் தெருவிலும் நீங்கள் இதைப் பெற இயலும். கண்டிப்பாக தவற விடக் கூடாத ஒன்று இந்த சாக்லேட்.

குன்னூர் தாவரவளர்ப்பு மற்றும் தோட்டக் கலைக்கு பெயர் பெற்றது . பல அரிய வகை ஆர்க்கிட்கள் மற்றும் பல வகைப் பூக்கள் இங்கு செடிகளாக வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன. உலகில் வேறெங்கிலும் காணக் கிடைக்காத அரிய வகைப் பூக்கள் இங்கு உள்ளது மன நிறைவான அனுபவத்தை தரும்.
மலைவாசஸ்தலம் ஆனதால் குன்னூர் இதன் காலநிலைக்குப் பெயர் பெற்றது. குளிர் காலங்கள் அதிகபட்ச குளிருடனும், கோடைக்காலங்கள் மிதமான தட்பவெப்பத்துடனும் காணப்படும்.

குன்னூர் பயணப்பட விரும்பும் பயணிகள் மழைக்காலத்தில் இதன் அருகில் செல்லக் கூட ஆசைப்பட மாட்டார்கள். அதிக மழை மற்றும் தாங்க முடியாத குளிர் காணப்படும் என்பதால் மழைக்காலங்களை தவிர்ப்பது சிறந்தது.
குன்னூரை அடைவது மிக எளிது. கோயம்புத்தூரில் இருந்து மேட்டுப்பாளையம் ரயிலில் சென்று, அங்கிருந்து குன்னூருக்கு நீலகிரி மலை ரயில் மூலமாகச் செல்லலாம்.

கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும் ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும். அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத் தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.


Custom3

Cusomt2


Please login/signup then give your valuable answers


Click here to Login / Signup

Website Square Ad spp3
Website Square Vanavil2
Website Square Ad spp1
Website Square Ad spp2
Website Square Vanavil 1